சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக 143 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு .
கல்முனை பிராந்தியத்தின் சேனைக்குடியிருப்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்குமாக மொத்தமாக 93 குடும்பங்களுக்கும் , மேலும் தேற்றாத்தீவு மாங்காடு பிரதேசங்களில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் நேற்று (09) சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக உதவி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை