கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி
நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் அமைச்சின் இணையத்தளத்துக்குச் சென்று தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
http://moha.gov.lk/officerinfo/tamil/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று இந்த விவரங்களைக் கண்டறிந்து அவர்களுடைய சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை