சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த மூவர் நாடு திரும்பினர்
சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
துபாய் மற்றும் மாலைத்தீவிலிருந்து குறித்த மூவரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் இருவர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், மாலைத்தீவு விமான நிலையத்தில் சிக்கியிருந்த ஒருவர் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஏனைய 30 பேரையும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியூலர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை