மாவையின் நிதியில் கரவெட்டி மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சோ.சேனாதிராசா இன்று கரவெட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தமையுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார்.

இந்த உலர் உணவு வழங்கல் அந்தப் பிரதேசத்தில் மிகவும் வறுமையிலுள்ள 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் ஐங்கரன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.