இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது…

இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. சீனர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் உணவு தொடர்பாக அவர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள். ஊர்வன, நீந்துவன, நடப்பன, பறப்பன என எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. பறப்பனவற்றில் ஏயிரோப்பிளேன் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் விழுங்குகிறார்கள். சீனாவின் குடிப்பெருக்கமும் மக்களது வறுமையும் அவர்கள் பாம்பு, நாய், பூனை போன்றவற்றை உண்பதற்குக் காரணம் எனச் சொல்கிறார்கள். ஆனால் இந்த மூன்றும் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவாகும். இவற்றை பண்ணைகளில் வளர்க்கிறார்கள். நான் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னுடன் ஒரு மலேசிய நாட்டு சீன மாணவனும் இருந்தான். “சீனர்கள் எந்தவிதமான இறைச்சியை சாப்பிடுவார்கள், சாப்பிட மாட்டார்கள் எனக் கேட்டேன். அவனது பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. மனிதனைவிட மற்ற எல்லா உணவுவகைகளையும் சாப்பிடுவதாகச் சொன்னான்.இந்த கொரோனாவால் சீனர்களது பிம்பம் பலத்த அடிவாங்கியுள்ளது என்பது தெரிகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.