புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அன்பரால் யாழ். முஸ்லிம்களுக்கு உலர் உணவுகள்…
– தவம் அறக்கட்டளை நிலையத்தின் முன்மாதிரி
கொரோனா தொற்று அச்சம் ஏற்படுத்தி உள்ள அசாதாரண சூழல் காரணமாக யாழ். மாவட்டத்தில் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அந்தரிக்கின்ற வறிய மற்றும் வருமானம் இழந்த ஒரு தொகை முஸ்லிம் குடும்பங்களுக்கு முற்போக்குவாதி தவம் ஞாபகார்த்த அறக்கட்டளை நிலையத்தால் நிவாரண பொருட்கள் கடந்த தினங்
தவராசாவின் புதல்வர் சத்தியதாஸ் டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். அரசியல், சமூக, பொதுநல, ஊடக, இலக்கிய செயற்பாட்டாளரான இவர் தந்தையின் பெயரில் அறக்கட்டளை நிலையம் அமைத்து சொந்த நிதியில் இவ்வாறான மனித நேய பணிகளை நெடுங்காலமாக மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் தமிழ் – முஸ்லிம் இன நல்லுறவை அர்த்தம் உள்ள விதத்தில் மேம்படுத்துகின்ற வகையிலேயே இப்பொருளுதவிகள் இவரால் வழங்கி வைக்கப்பட்டன.
அறக்கட்டளை நிலையத்தை சேர்ந்த வண. கா. ஜெயராஜன், யாழ். நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த மரண விசாரணை அதிகாரி சி. மோகன், இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையக அதிகாரிகள் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை