இத்தாலி, ஸ்பெயினுக்கு மீட்சி கிட்டுகிறது: உலகம் முழுவதும் 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படும் மரணங்கள் நேற்று சற்றுக் குறைவடைந்துள்ளன.

இந்த வைரஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் குறைந்துள்ளன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்குப் பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக நாடுகளில் இதுவரை மொத்தமாக 18 இலட்சத்து 53 ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 250 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், இதுவரை 4 இலட்சத்து 23 ஆயிரத்து 692 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஏனைய நாடுகளை விட அமெரிக்காவில் நேற்றும் அதிகம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரேநாளில் ஆயிரத்து 528 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று மட்டும் புதிதாக 27 ஆயிரத்து 421 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 5 இலட்சத்து 60 ஆயிரத்து 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு மொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்து 105 ஆகப் பதிவாகியுள்ளதுடன் உலக அளவில் அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட நாடாக இப்போது அமெரிக்கா உள்ளது.

இதனைவிட அமெரிக்காவில் 32 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதும் 5 இலட்சத்து 5 ஆயிரத்து 561 பேர் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள இந்த வைரஸ் காரணமாக அந்நாடுகளில் இதுவரை 8 இலட்சத்து 81 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 548 பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

மேலும், நேற்று குறித்த நாடுகளில் 28 ஆயிரத்து 211 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 143 மரணித்துள்ளனர்.

அத்துடன், இந்நாடுகளில் 76 ஆயிரத்து 768 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் 29 ஆயிரத்து 929 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளமை பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது.

தற்போதைய நிலைவரப்படி, அந்நாட்டில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 899 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், நேற்று புதிதாக 4 ஆயிரத்து 92 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதனைவிட ஸ்பெயினில் நேற்று ஒரேநாளில் 561 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கும் முன்னரைவிட உயிரிழப்புக்களும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அங்கு நேற்று 3 ஆயிரத்து 804 பேர் புதிதாக வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 209 பேராகப் பதிவாகியுள்ள நிலையில் அங்கு 62 ஆயிரத்து 391 பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, பிரான்ஸில் நேற்று ஒரேநாளில் 561 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்தமாக 14 ஆயிரத்து 393 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று 2 ஆயிரத்து 937 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அந்நாட்டில் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிரித்தானியாவில் நேற்று மட்டும் 737 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கும் உயிரிழப்புக்கள் மொத்தமாக பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 612 ஆகப் பதிவாகியுள்ளது.

அங்கு, நேற்று புதிய நோயாளர்கள் 5 ஆயிரத்து 288 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 84 ஆயிரத்து 279 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புக்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

அந்நாட்டில், நேற்று 151 மரணங்கள் பதிவாகி மொத்த உயிரிப்பு 3 ஆயிரத்து 22 ஆக உள்ளது. மேலும் 60 ஆயிரத்து 300 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதையடுத்து மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 254 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 3 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மொத்தமாக 29 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட, ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்தில் 94 பேரும், சுவிற்சர்லாந்தில் 70 பேரும், போர்த்துகலில் 34 பேரும் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளதுடன், ரோமானியாவில் 25 பேரும் பொலந்து மற்றும் ரஷ்யாவில் தலா 24 பேரும் மரணித்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க நாடுகளான கனடாவில் 64 பேர் நேற்று மரணித்துள்ளதுடன் அங்கு 717 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 24 ஆயிரத்து 383 ஆக உள்ளது.

மேலும் பிரேஸிலில் 83 பேர் நேற்று மரணித்துள்ளதுடன் மொத்தமாக அங்கு ஆயிரத்து 223 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஆசிய நாடுகளில் நேற்று மொத்தமாக 405 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக ஈரானில் 117 பேர் மரணித்துள்ளனர். அந்நாட்டில் மொத்தமாக 4 ஆயிரத்து 474 பேர் மரணித்துள்ள அதேவேளை மொத்தமாக 71 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, துருக்கியில் 97 பேர் நேற்று மட்டும் மரணித்துள்ள நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக 43 பேர் மரணித்துள்ளதுடன் பிலிப்பைன்ஸில் 50 பேரும், இந்தோனேஷியாவில் 46 பேரும் ஜப்பானில் அதிகபட்சமாக 15 பேரும் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சீனாவில் நேற்று 99 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் எதுவும் பாதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.