கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 32 பேர் ஒலுவில் முகாமுக்கு – இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

ஜா – எலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் 32 பேர் இனங்காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் இவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.