ஊரடங்கை மீறிச் செயற்பட்ட 26 ஆயிரத்து 600 பேர் சிக்கினர்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26 ஆயிரத்து 600 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மட்டும் ஆயிரத்து 600 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.