மன்னார் மக்கள் கொரோனா அச்சம் கொள்ளாதவகையிலே காற்றாலை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை வேலைத் திட்டத்தில்
பங்குபற்றுவோரால் இங்குள்ளவர்கள்  கொனோரா தொற்று நோய்க்கு ஆளாகுவார்கள்
என்ற அச்சத்தக்கு உள்ளாகாத வகையிலேயே செயல்படுவோம் என தெரிவித்த
நிலையிலேயே விஷேட செயலனியின் அனுமதியுடன் இவ் வேலைத்திட்டத்தை மீண்டும்
முன்னெடுக்கின்றோம் என காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு
தெரிவித்துள்ளது.

கொனோரா தொற்று நோய் அச்சம் தொடர்ந்து நிலவி வரும் இவ்வேளையில்
வெளிநாட்டவர்களால் மன்னார் நடுக்குடா பகுதியில் மேற்கொள்ள்பட்டு வந்து
இடை நிறுத்தப்பட்டிருந்து இவ் வேலைத்திட்டத்தை மீண்டும்
ஆரம்பிக்கப்படுவதற்கான முயற்சி எடுக்க்பட்டபோது இவ் சுற்றாடலில் வாழும்
மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது இவ் தொற்று நோய் காரணமாக இலங்கையில் அனைத்து அபிவிருத்தி
திட்டங்களும் முடங்கியிருப்பதுடன் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு
மாவட்டத்துக்குச் செல்வதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இவ் தருவாயில்
வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்படும் இவ் வேளைத்திட்டத்தை மீண்டும்
ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டவர்களினது மீள் வருகையால் கொரோனா அச்சுறுத்தலுக்கு
அச்சம் கொண்டு நாடு ஒரு சுமூக நிலைக்கு வரும்வரைக்கும் இவ் திட்டத்தை
இடைநிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்து இவ் சுற்றாடலில் வாழும் மக்கள்
வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றையும் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்

இது விடயமாக இவ் காற்றாலை திட்ட குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில்
நேற்று புதன் கிழமை (15.04.2020)  ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

வெளிநாட்டு நிறுவனங்களின் இரண்டு கம்பனிகள் இவ் திட்டத்தை ஒப்பந்த
அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இவ் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர் நாடு திரும்பாத நிலையில் இங்கே
தங்கியுள்ளனர்.

அத்துடன் இதில் பணிபுரிவோர் யாவரும் கொரோனா சமூக தொற்று நோய்
பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தனர்.

தற்பொழுது ஒரு மாதங்களாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களை
சமூக தொற்று நோய் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இவர்களில் எவரும் எவ்வித
கொரோனா நோய் அறிகுறிகளுக்கும் ஆளாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இவர்கள் அவர்களின் இவ் வேளை தளத்துக்குச் சென்று
செயல்படலாம் என அனுமதி பெறப்பட்டுள்ளது.

இப்பொழுது எங்கள் வேலையானது கோபுரத்தை உயர்த்தி செய்யும் வேலையாகவே
இருக்கின்றது. மன்னாரைப் பொறுத்தமட்டில் இனி வரும் ஆறு மாதங்களுக்கு இவ்
பகுதியில்  கடும் காற்று வீசும் காலமாகும்.
ஆகவே அச்சமயம் இவ் வேளையை செய்ய முடியாது என்பதற்காக இவ் திட்டத்தை
தற்பொழுது உடன் ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு இருக்கின்றோம் என்றனர்.

அத்துடன் நவம்பர் மாதத்துக்கு முன் 30 காற்றலைகளையும் இயங்க வைப்பதே எமது
குறிகோளாகவும் இருக்கின்றது. ஒரு மாதத்தில் ஆறு காற்றாலைகளை பொறுத்துவதே
எமது கணிப்பாக இருக்கினறது.

நாங்கள் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொரோனா விடயமான பாதுகாப்பையும்
உறுதிப்படுத்தும் விடயத்தில் அறிக்கையையும் சமர்பித்துள்ளோம். ஆகவே
கொரோனா நோய்க்கு எதிராக சர்வதேசம் மற்றும் இவ் நாடு எதை முன்னெடுத்துச்
செல்லுகின்றதோ அதற்கமைவாகவே எங்கள் செயல்பாடும் அமையும் என தெரிவித்தனர்.

இவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
சீ.ஏ.மோகன்றாஸ் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

காற்றாலை திட்டப் பணிப்பாளர் கொண்ட குழுவினர் எமக்கு உறுதிமொழி
அளித்துள்ளனர் அதாவது இப் பகுதி மக்களை பாதிக்காதவகையில் இவ் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்காக எங்கள் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளனர். விஷேட செயலனி எங்களுக்கு
விடுத்திருக்கும் பணிப்பின்பேரில் நாங்கள் இவ் திட்டத்தை மீண்டும்
ஆரம்பிக்க அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.