மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதால் ஊரடங்குச் சட்டம் தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ

இலங்கையில் கொனோரா வைரஸ் தொற்று நோய் விடயத்தில் இலங்கையில் அபாயம்
குறைந்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் காணப்படுவதால் அடுத்த வாரம்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும்
ஒன்றாகும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
தா.வினோதன் தெரிவித்தார்.

இது விடயமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
தா.வினோதன் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டம் கடந்த ஒரு மாதமாக எந்தவிதமான கொரோனா தொற்று நோய்க்கும்
அடையாளம் காணாத ஒரு மாவட்டமாக இருக்கின்றது.

இதனால் இவ் மன்னார் மாவட்டம் இலங்கையில் அபாயம் குறைந்த மாவட்டங்களில்
ஒரு மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் திட்டதுக்கு அமைய இவ்வாறான குறைந்த அபாயம் உள்ள
மாவட்டங்கள் எதிர்வரும் வாரம் முதல் படிப்படியாக ஊரடங்குச் சட்டம்
தளர்த்தப்பட இருக்கின்றன.

இதன் மூலம் மக்களின் சாதாரான வாழ்க்கை முறைமைக்கு அனுமதிப்பது என அரசு
தீர்மானித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இவ் ஊரடங்கு
சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இப் பகுதி மக்கள் தங்கள் நாளாந்த
வாழ்க்கை முறைமைக்கு திரும்புவதற்கான நிலை உள்ளது.

இருந்தும் ஏற்கனவே நடைமுறைக்கு இருந்து வருகின்ற சுகாதார நடைமுறைகளை
அதாவது சமூக இடைவெளி சமூக பொறுப்புக்களை உணர்ந்தவர்களாக இவ் வாழ் மக்கள்
எப்படி கடந்த ஒரு மாதமாக இருந்து வந்தார்களோ அவற்றை அனுசரித்து வர
வேண்டும்.

இவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தால் மன்னார் மாவட்டம் இவ் நோய்
அச்சத்திலிருந்து வீடுபடுவதற்கான ஒரு மாவட்டமாக இருக்கும்.

மன்னார் மாவட்டம் கொரோனா நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதை
முன்னிட்டு நேற்று முன் தினம் வியாழக் கிழமை (16.04.2020) மன்னார்
அரசாங்க அதிபர் தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து
கொண்டார்கள். இவற்றில் சில தீர்மானங்கள் எடுக்கப்படடிருந்தது.
இவ் மாவட்டம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு விடுவிக்கப்படுகின்ற
காலக்கட்டத்தில் அமுல்படுத்தப்படும்  இருந்தும் இது தக்கக் காலங்களில்
சம்பத்தப்பட்டவர்களுடன்  கலந்துரையாடுவதும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது இவ்வாறு இருக்க அவரிடம் நடுக்குடாவில் தற்பொழுது மேற்கொள்ளப்பட
இருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வரும் சுகாதார
விடயமாக வினவியபோது

மன்னார் நடுக்குடாவில் நடைபெறும் இவ் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு
ஒரு மாதத்துக்கு முன் இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலையால் அது தற்காலிகமாக
இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இங்கு கடமை புரிந்து வரும் இந்திய நாட்டு தொழிலாளர்கள் மன்னாரிலேயே
தங்கியிருந்தனர். சுpல வெளி மாவட்ட தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களுக்குச்
சென்றிருந்தார்கள்.

ஆனால் மன்னார் மாவட்டத்துக்கு புதிதாக யாரும் வெளி நாட்டிலிருந்து இங்கு
வரவில்லை. இந்த காற்றாலை அபிவிருத்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க
முடியுமா என்பதை சுகாதார ரீதியில் பரிசீலித்து பரிந்துரைக்கும்படி
மின்சார சபையினர் கேட்டிருந்தனர்.

இதற்கமைய நான் அவ்விடத்துக்குச் சென்று அவர்களின் அலுவலகம் களஞ்சியப்
பகுதி காற்றாலை பொருத்தப்பட இருக்கின்ற இடங்கள் தொழிலாளர்கள்
தங்கியிருக்கும் இடங்கள் எல்லாவற்றையும் இரண்டு வாரங்களுக்கு முன் நான்
நேரடியாகச் சென்று பார்வையிட்டேன்.

அங்கு சில பாதுகாப்பு முறைமைகளை ஏற்கனவே அவர்கள் எடுத்திருந்தமையும்
கவனித்திருந்தேன். ஆவைகள் திருப்திகரமாக இருந்தது. நோய் பரவக்கூடிய
அபாயம் அங்கு தென்படவில்லை.

ஆகவே இவ் திட்டமானது நாட்டுக்கும் மாவட்டத்துக்கும் அவசியம் என்ற நலன்
கருதி தொடர்ந்து முன்னெடுக்கலாம் என நான் சுகாதார ரீதியில் பரிந்துரை
செய்துள்ளேன்.

அத்துடன் பொலிசாரும் இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி
மொழி வழங்கியுள்ளனர். இவ் திட்டத்துக்கு பொருட்களை எடுத்து வரும்
பணியாளர்களை இங்கு கடமைபுரியும் பணியாளர்களுடன் தொடர்பற்ற நிலையை
பேணுவதுடன் இவர்களுக்கென தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் செய்து
கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் மூலம் இங்குள்ள சமூகத்துக்கு தொற்று நோய் உருவாகும் என்ற
அச்சம் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.