துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் 09 ஆம் கட்ட நிவாரணப்பணி 150 குடும்பங்களுக்கு இன்று….

துளிர் கழகத்தினால் குண்டுமடு, வட்டிவெளி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச 150 பயனாளிகளுக்கு இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. அதேபோன்று பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களும் பல்வேறு வாழ்வாதார இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் குண்டுமடு, வட்டிவெளி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் மக்களின் அன்றாட வாழ்வினைக் கருத்திற்கொண்டு இன்றைய தினம் துளிர் கழகத்தினரினால் 9ம் கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் சீடாஸ் கனடா அமைப்பின் நிதி அனுசரணையில் 150 பயனர்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டன.

இவ் நிவாரணப் பணியில் பொத்துவில் பிரதேச செயலாளர் திரு R.திரவியராஜ் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.