கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்ததுடன் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 77 ஆக வும் உயர்ந்துள்ளது.

அத்தோடு உலகான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குணமடைந்தவர்களின் விகிதம் 31.56 % ஆக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.