அனைத்து மாவட்ட செயலாளர்களும் கொழும்புக்கு வரவழைக்கபட்டனர்

அனைத்து மாவட்ட செயலாளர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது அரச ஸ்தாபனங்களில் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது என்பது குறித்து முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாவசிய ஊழியர்களின் பங்களிப்புடன் முதல் கட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அரசு நிறுவனங்களில் கடமைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.