கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்பு

அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பன ஒன்றிணைந்து கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளன.
129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணங்கள் தொகுதி, அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் (2020.04.16) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இந்த அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.