கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப் போட அதிகாரம் இல்லை! – ஆணைக்குழுவிடம் மஹிந்த சுட்டிக்காட்டு  


நாடாளுமன்றத் தேர்தலை கால வரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இற்கு அமைய, ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், மற்றொரு திகதியை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எனும் தலைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் இரு பக்கங்களில் பிரதமர் வெளியிட்டுள்ள இரண்டு பக்கங்களிலான அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.