ஹோட்டலுக்கு அழைத்த இயக்குனர், திடீரென மேல கை வைத்த பிரபல நடிகர்.. குமுறும் பிரபல நடிகை

தமிழ் மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மிக சொற்ப படங்களிலேயே நடித்துள்ளார்.

நடிகர் சேரன் இயக்கத்தில் உருவாகி இருந்த மாயக் கண்ணாடி படத்தில் நடித்த நவ்யா நாயர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நவ்யா நாயர் மலையாள சினிமாவின் முக்கிய நடிகரைப் பற்றி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் திலீப். சமீபகாலமாக இவரின் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. நடிகை பாவனா சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மிகவும் முக்கிய குற்றவாளியாக திலீப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் நவ்யா நாயர், திலீப் படமொன்றில் அறிமுகமான புதிதில் நடிப்பதற்காக இயக்குனர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சூட் செய்தார்கள் என கூறியுள்ளார்.

மேலும் அப்போது இயக்குனர் திடீரென ரொமான்டிக் போஸ் கொடுக்க சொன்னபோது கொஞ்சமும் தயங்காமல் திலிப் தன் தோளில் கைவைத்தது என்னை மிகவும் பதற்றம் அடைய வைத்தது எனவும் கூறியுள்ளார்.

எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல ஏற்கனவே திலீப் மீது பல பிரச்சினைகள் எழுந்த நிலையில் நவ்யா நாயர் இந்த செய்தியைக் கூறியது காட்டு தீ போல் பற்றிக் கொண்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.