தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிப்பதற்கான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம்!

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க உருவாக்கியுள்ளார்.

கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறும், இந்த தயாரிப்புக்கு காப்புரிமை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய பிரதமர், இந்த உபகரணத்தை இராணுவத் தளபதியின் கண்காணிப்புக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.