வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க வீதியில் இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்! – ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே…

இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா
தொற்றுடன் அடையாளம்!

– ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே

கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மட்டும் இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 32 பேருக்குத் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில், இன்றைய நாளே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து குறித்த பகுதியில் கடந்த 5 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியைச் சேர்ந்த 59 வயதான குடும்பப் பெண் கடந்த 15ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.