தனிமைப்படுத்தப்பட்ட  4,348 பேர் வீடுகளுக்கு!

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4 ஆயிரத்து 348 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதியும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து பரிசோதனைகளின் பின்னர் 149 இற்கும் அதிகமான நபர்கள் நேற்று (21) தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4 ஆயிரத்து 348 பேர் தங்களது வீடுகளுக்குச்  சென்றுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் செயற்படுகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.