உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குடும்பத்தின்‌ 10 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சனிக்கிழமை கல்லடி பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் கணவாய் வாங்கியதாகவும், பின் அதனை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்ட பின் தமக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் குடும்பத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த பிள்ளையின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.