பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது.”

– இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

எனினும், பாடசாலைகளை மே மாதம் 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதில் மாற்றம் எதையும் இதுவரை எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.