ஜூலை 1ஆம் திகதி வரை எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது: இங்கிலாந்து கிரிக்கெட்!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் ஜூலை 1ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

அதே வேளை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் சபை கூட்டத்தில், நடப்பு ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ‘த ஹன்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் எதிர்காலம் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக மே மாதம் 28ஆம் திகதி வரை எந்த கிரிக்கெட்டையும் விளையாட மாட்டோம் என்று ஆளும் குழு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் அந்த திகதி தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிரிக்கெட் சபை கூட்டத்தில், இந்த கோடையில் சில கிரிக்கெட் சாத்தியமானால் ஆங்கில பருவத்தை கணிசமாக மறுசீரமைக்கும் பல நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது.

போட்டிகளைத் தொடங்கினால், போட்டிகளில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மைதானத்தில் ஆதரவாளர்கள் இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவை விளையாடப்படும்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது, ஆனால் எந்தவொரு போட்டிகளும் நடைபெறுவதற்கு முன்பே அரசாங்க ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.