கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 109 பேர் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.