விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகை தருவோருக்காகவே இந்த முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், நிறுவனத்தின் பெயர், ஊழியர்கள் பணிக்கும் வருகைதரும் இடம், வீதி ஒழுங்கு, பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்து, சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

dgmoperation@sltb.lk    இணையத்தள முகவரியில் பிரவேசித்து தகவல்களை பதிவிடுமாறும் அறிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.