விஜய் சம்பளம் எனக்கு கொடுங்க, நானும் உதவி செய்கிறேன்.. தளபதியை வம்புக்கு இழுத்த கருணாகரன்

கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

அந்தவகையில் பல நடிகர் நடிகைகளும் கொரானா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தளபதி விஜய் அரசுக்கு 1.30 கோடி ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கஷ்டப்படும் விஜய் ரசிகர்கள் குடும்பத்திற்கு தலா 5,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார். இதனால் அனைத்து மாநில முதலமைச்சர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 5 லட்சம் அனுப்பிய விஜய்யை அதன் முதலமைச்சர் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அனைத்து நடிகர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கருணாகரன், விஜய்யை போல் எங்களுக்கும் சம்பளம் கொடுங்கள் நாங்களும் செய்கிறோம் என்பதைப்போல கிண்டலாக தனது பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களையும் கோபப்படுத்தி உள்ளது. ஆனால் இதை ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோனில் பதிவிட்டது தான் வேடிக்கையாக உள்ளது.

karunakaran-cheap-tweet

25 வருடமாக சினிமாவில் போராடி கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ள விஜய்யை இப்படி விமர்சிப்பது சரியில்லை என அவரது ரசிகர்கள் இஷ்டத்துக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.