விடுமுறையில் சென்று வரும் இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது ! – மாவை

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் மக்கள் அதிகமாக வாழ்வதனால் அங்கு இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொது மக்கள் அதிகளவாக இருக்கும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள இடங்களை வடக்கிலோ உள்ளது தெற்கிலோ தனிமைப்படுத்துவதற்காக தெரிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு விடுப்பை முடித்து கடமைக்குத் திரும்பும் படையினரை தங்கவைத்து பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக அறிந்து அரசாங்க அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் மாவை சேனாதிராஜா கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.