மாமனிதர் தராகி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
ஏ9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று 29.04.2020 புதன்கிழமை 1167 ஆவது போராட்ட நாளில், மாமனிதர் தராகி அவர்களின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி தமிழர் தாயக சங்கத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழர் பிரச்சினையை சர்வதேச அரசியல் மயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஊடகவியலாளர் தராகி. ஆனால் அவரது படுகொலைக்கு நீதியைப் பெறுவதற்கு கூட, சர்வதேச விசாரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பார் கோரவில்லை என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக தொழிற்பட்டவர் அரசியல் ஆய்வாளர் தராகி. ஆனால் இன்று மாமனிதர் தராகியை படுகொலை செய்தவர்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து கொலைகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தமிழர் தாயக சங்கத்தினர் காட்சிப்படுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.