படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு!!

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நேற்று கண்டறியப்பட்டவா்களில் 21 போ் கடற்படையினராவா். 6 போ் கடற்படையினரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புகளைப் பேணியவா்கள். ஏனைய 4 பேரும் இராணுவத்தைச் சோ்ந்தவா்கள்.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படையினர் வெலிசறை கடற்படை முகாமைச் சோ்ந்தவா்களாவா்.

ஏனைய தொற்று நோயாளிகள் மெடிரிகிரிய, அரநாயக்க, பொல்பிதிகம, அகலவத்தை, மற்றும் ஹபரன பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு நாட்டில் உள்ள 7 வைத்தியசலைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிசறை கடற்படை வைத்தியசாலை ஆகியவற்றில்  இந்தச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.