ஹற்றனில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹற்றன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி ஹற்றன் நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்படவுள்து.

தண்டனைச் சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹற்றன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்குத் தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹற்றன் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுசுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். இதன்போதே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் என கடந்த 24ஆம் திகதி வர்த்தகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் பெரும்பாலானவர்கள் அவற்றை மீறும் வகையில் செயற்படுவதைக் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.