பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடர் இரத்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு இணங்க, பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடரான ‘லீக்-1’ கால்பந்து தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என தொழில்முறை கால்பந்து லீக் மற்றும் பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு எண்ணியிருந்தது.

ஆனால், பிரான்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், செப்டம்பர் 1ஆம் திகதி வரை விளையாட்டு உட்பட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் தற்போது ‘லீக்-1’ கால்பந்து தொடரை இரத்து செய்வதாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடருக்கு லீக்-1 புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி தகுதி பெறும். தற்போது இரத்து செய்யப்பட்டதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது.

ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் தொடரை இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.