ஒரு தடவே தான் கண்ணா மிஸ் ஆகும்.. ஒரு முடிவோட களமிறங்கும் ரஜினி.. இந்தவாட்டி தலயா? தலைவரா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் சமீபகாலமாக நேரடியாக படங்களை ஒரே தேதியில் வெளியிட்டு மோதிக் கொள்வதில் ஈடுபாடுகொள்வதில்லை.

வசூல் பாதிக்கப்படும் என்பதால் தியேட்டர்காரர்களே இதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இருந்தாலும் தொடர் விடுமுறை என்றால் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்வதையும் பார்க்க முடிகிறது.

அப்படித்தான் கடந்த பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் ரஜினி நடிப்பில் பேட்ட படமும் ஒரே தேதியில் வெளியாகி இரண்டு படமும் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ரஜினி கூட போட்டியில் வெற்றிபெறுவது நடக்காத காரியம். ஆனால் தமிழக வசூலில் ரஜினிக்கு அஜித் இணையாக வந்தது ஆச்சர்யம்தான். இருந்தாலும் மொத்த வசூலில் ரஜினியே அதிகம்.

இந்நிலையில் மீண்டும் தல அஜித் மற்றும் தலைவர் ரஜினிகாந்த் இருவரும் ஒரே தேதியில் மோதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது கொரானா பாதிப்பால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மேலாகுமாம்.

இதனால் தீபாவளிக்கு வெளியாக இருந்த வலிமை படமும் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருந்த அண்ணாத்த படமும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு தள்ளிச் சென்று உள்ளது. மீண்டும் இரண்டு நடிகர்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் வலிமை படத்தின் படப்பிடிப்பு சுமார் 72 நாட்கள் மீதமுள்ள நிலையில் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.