உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் – ரணில்
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை குறைந்தது இன்னும் ஒருவருடத்திற்கு உலக நாடுகள் சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை மக்களுக்கு ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உடனடியாக நாடாளுமன்றத்தினைக் கூட்டுமாறு எதிர்க் கட்சியினர் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை