மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளிற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை நீடித்திருப்பதை அடிப்படையாக வைத்து ஊரடங்கு எதிர்வரும் 31 வரை நீடிக்கப்படும் என்ற முடிவிற்கு வரமுடியாது என அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.