கந்தளாயில் மறை இறைச்சி, துவக்கு,தேன் மற்றும் இரும்புகளுடன் 31 பேர் கைது.

எப்.முபாரக்

 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு(30) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும்,தேன் போத்தல்களும்,மறை இறைச்சி வகைகள் மற்றும் கத்தி மண்வெட்டி போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல,அக்போபுர,ஜயந்திபுர, பேராறு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை சேருவில பொலிஸார் ஊடாக இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.