மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழை பகுதியில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேத்தாழை மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இளம் குடும்பஸ்த்தர் தனக்குத்தானே தீ மூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் ச.புஸ்பகுமார் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்களன்று சமூர்த்திப் பணத்தினைப் பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறியதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்பத் தகராறு இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன் பொதுமக்கள், கல்குடா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தினை கண்டெடுத்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை இடம்பெற்றுவருகிறது.
கருத்துக்களேதுமில்லை