கொழும்பில் சிக்கித் தவித்தவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி – இன்றிலிருந்து ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கித் தவிப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி இன்றிலிருந்து ஆரம்பமானது.

முதல் கட்டமாக களனிப் பகுதியில் இருந்தவர்கள் முறையான சுகாதார பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு இ.போ.ச. பஸ்களில் இன்று திருப்பி அனுப்பப்பட்டனர்.

பேலியகொடை, விஜயகுமாரதுங்க மைதானத்தில் இந்த ஆயத்தப் பணிகள் இன்று காலை நடந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.