52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், நீண்டகால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 பேர் இன்று களனியில் வைத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ளவர்களை விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.