கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிப்பு!
கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத் தொகையாக 13.10 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்முலம் அடிப்படை ஊதியத்த்தை பெற்று வந்தவர் வாரமொன்றுக்கு 22.50 கனடிய டொலரினை மேலதிக ஊதியமாக பெறுவார்.
குறித்த ஊதிய அதிகரிப்பு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதனை, கியூபெக் மாகாண தொழிலாளர் அமைச்சர் ஜீன் பவுலட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த ஊதிய அதிகரிப்பின் மூலம் 409,100 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை