வெள்ளை முடியா மாறின பின்னாடி டை அடிக்காம இயற்கையா மறுபடியுமா கருப்பா மாத்த முடியுமா?

நமக்கு வயதாகும் போது முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை, மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், பரம்பரை போன்றவைகள் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். நிறைய பேருக்கு கூந்தல் பராமரிப்பு என்ன என்றே தெரிவதில்லை. இதனாலும் நிறைய பேர்கள் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார்கள். 30 வயதை அடைந்த உடன் 20 சதவீதம் வரை நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. உங்களுக்கு 20 அல்லது 30 வயதுக்குள் நரைமுடி பிரச்சனை இருந்தால் அது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதன் மூலம் நரைமுடியை தடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இதோ போன்று நரைமுடியை பழை நிலைக்கு கருப்பாக மாற்ற முடியுமா அதற்கு எதாவது டெக்னிக் இருக்கிறதா வாங்க பார்க்கலாம்.

​நரைமுடி ஏன் ஏற்படுகிறது

samayam tamil
 • வயதாகும் போது நம் தலைமுடி நரைப்பதற்கு முக்கிய காரணம் மெலனின் என்ற நிறமியின் இழப்பு தான்.
 • இந்த மெலனின் என்ற நிறமி தான் உங்க முடிக்கும் தோலுக்கும் ஒரு இயற்கையான நிறத்தை கொடுக்கிறது. எனவே இந்த மெலனின் இழப்பு நிறைய காரணங்களால் ஏற்படுகிறது.
 • உங்களுக்கு ஏற்படும் நரைத்தல் மரபணு காரணங்கள் மற்றும் இயற்கையானது என்றால் உங்க நரைமுடியை மீட்டெடுக்க வாய்ப்பில்லை. ஆனால் ஊட்டச்சத்து பற்றாக்குறை தான் இதற்கு காரணம் என்றால் உங்க தலைமுடியின் நிறத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது.
 • அதற்கு நீங்கள் போதிய ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை உண்ணும் போது நரைமுடியில் மாற்றத்தை கொண்டு வரலாம்.

​நரைமுடிக்கு காரணம் மரபணுவா?

samayam tamil
 • குறிப்பாக 30 வயதிலேயே உங்க பெற்றோர் நரைமுடி பிரச்சினையை சந்தித்து இருந்தால் உங்களுக்கும் இளம் வயதிலேயே மரபணு காரணமாக நரைமுடி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • இந்த மாதிரி மரபணு ரீதியாக ஏற்படும் நரைமுடி பிரச்சினையை போக்க விளம்பரங்களிலும் ஆன்லைன் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் மாற்ற இயலாது.
 • ஏனெனில் இயற்கையாக மயிர்க்கால்கள் உற்பத்தி செய்யும் மெலனின் நிறமியை தோற்றுவிக்க முடியாது. எனவே அந்த மாதிரியான வேலைகள் எல்லாம் பொய் என்றே கூற வேண்டும்.

நரைமுடியை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா

 • உங்க தலைமுடி நரைப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவற்றை சரி செய்வதன் மூலம் நரைமுடியை மாற்ற வாய்ப்பு உள்ளது.

​ஊட்டச்சத்து குறைபாடுகள்

samayam tamil
 • தலைமுடிக்கு தேவையான போஷாக்கை கொடுக்க ஒரு சீரான உணவு என்பது அவசியம். உங்க தலைமுடிக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் இல்லாவிட்டால் அது முன்கூட்டியே நரைக்க ஆரம்பித்து விடும்.
 • வைட்டமின் பி 12, ஃபோலேட், செம்பு மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • எனவே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க விட்டமின் மாத்திரைகளை நீங்கள் எடுத்து வரலாம். இதன் மூலம் உங்க தலைமுடியின் நிறம் மாற்றம் அடைவதை நீங்கள் காணலாம்.
 • இருப்பினும் கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு நீங்கள் உங்க மருத்துவரை அணுக வேண்டும்.

​உடல்நல பிரச்சனைகள்

samayam tamil
 • தைராய்டு நோய் அல்லது அலோபீசியா அரேட்டா போன்ற உடல்நல பாதிப்புகளால் உங்களுக்கு முன்னரே நரைத்தல் பிரச்சனை ஏற்படலாம்.
 • மற்றொரு காரணம் நமக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் முக்கிய காரணமாகின்றன.
 • எனவே இந்த உடல்நல பிரச்சனைகளை நீங்கள் சரி செய்வதன் மூலம் உங்க நரைமுடி பிரச்சனையை மாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 • உங்க தலைமுடி மெதுவாக நரைக்க அல்லது முடி நரைப்பதை தடுக்க சில வழிகள் உண்டு.
 • மன அழுத்தத்தால் கூட முடி நரைக்கும் பிரச்சனை ஏற்படலாம். எனவே உங்க மன அழுத்த ஹார்மோனை மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை சரி செய்யலாம்.
 • உங்க எடையை பராமரித்தல்
 • மாசு அல்லது வேதிப்பொருட்களின் வெளிப்பாட்டை குறைத்தல்
 • உங்க தலைமுடியை சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாத்தல்
 • போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பலனளிக்கும்.

​நரைமுடி பற்றிய கட்டுக்கதைகள்

samayam tamil
 • இயற்கையாக ஏற்பட்ட நரைத்தலை மறுசீரமைக்க முடியாது. இருப்பினும் ஆன்லைனில் கிடைக்கும் சில பொருட்கள், இயற்கை வைத்தியங்கள் போன்றவை மீட்டெடுத்தலை உறுதிப்படுத்தலாம். ஆனால் இந்த வைத்தியங்கள் பெரும்பாலும் உண்மையான பலனை தருவதில்லை.

ஊட்டச்சத்து மாத்திரைகள்

 • பயோட்டின், துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி 12 மற்றும் டி -3 ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் உங்க நரைமுடியை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது.
 • இருப்பினும் இந்த குறைப்பாடுகள் உங்கள் நரைக்கு காரணமாக இல்லாவிட்டால் இந்த விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது வேலை செய்யாது.
 • இயற்கையாக முடி நரைப்பதற்கு விட்டமின் மாத்திரைகள் பலன் அளிக்காது.

​ஹேர் மாஸ்க்

samayam tamil
 • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறுகள் நரைமுடியை மாற்றுவதாக கூறுகின்றனர்.
 • இவை வேண்டும் என்றால் உங்க தலையில் ஏற்படும் அழற்சியை போக்கலாம். அதே மாதிரி ஆக்ஸினேற்றிகளை அதிகரிக்கலாம்.
 • இந்த செயல்கள் உங்க தலைமுடியை பளபளப்பாக மாற்ற வேண்டும் என்றால் உதவலாம். ஆனால் அவை முடியின் நிறத்தை மீட்டெடுப்பது என்பது கடினம்.

​உருளைக்கிழங்கு தோல்

samayam tamil
 • உருளைக்கிழங்கின் தோலில் காணப்படும் ஸ்டார்ச் நிறத்தின் மூலம் நரைமுடியை கருப்பாக்க முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.
 • ஆனால் இந்த செயலுக்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் சொல்லப்படவில்லை.
 • எனவே உருளைக்கிழங்கு தோல் வேண்டும் என்றால் தலைமுடிக்கு கருப்பு மேற்பூச்சை கொடுக்கலாம்.
 • ஆனால் அது தலைமுடியின் நிறத்தை எல்லாம் மாற்றாது. நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் முடியின் கருப்பு நிறம் போய்விடும்.

​என்ன செய்யக் கூடாது

samayam tamil
 • மரபணு ரீதியாக நரைமுடி பிரச்சனை ஏற்பட்டால் அதை மாற்றியமைக்க வழி இல்லை
 • நரைமுடியை செயற்கையாக மறைக்க சில டைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து கூந்தல் கலை நிபுணரிடம் பேசிக் கொள்வது நல்லது. ரூட் டச்-அப் பொடிகள் மற்றும் கிரீம்கள் கூட இதற்கு வேலை செய்யலாம்.
 • கெமிக்கல் டைகளால் முடியில் ஏற்படும் பாதிப்பை தடுக்க மருதாணி மற்றும் நெல்லிக்காய் போன்ற இயற்கையான பொடிகளை பயன்படுத்தி வரலாம்.
 • இந்த மாதிரி நரைமுடிக்கு செயற்கையான நிறத்தை தரும் பொருட்கள் நரைமுடியின் நிறத்தை மாற்றுவதோடு உங்க முடி உடைவதையும் தடுத்து வெளிர் நரைமுடியை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.