மே மாதத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!

மே மாதத்திற்கான கிரக நிலை


சூரியன் – மே 13 வரை மேஷ ராசியில் இருக்கும் சூரியன், 14ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சுக்கிரன் – ரிஷப ராசியில் மே 3 வரையும் பின்னர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மே 23ம் தேதி சுக்கிரன் வக்கிர நிலைமை அடைகிறார்.
ராகு – மிதுன ராசியில் இருக்கிறார்

சனி வக்கிரம் பெற்று கேது உடன் தனுசு ராசியில் இருக்கிறார்.
செவ்வாய் – மே 4 வரை செவ்வாய் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
புதன் – மேஷ ராசியில் இருக்கும் புதன் மே 4ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 24ம் தேதி புதன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு – மகரத்தில் முழு அதிசாரத்தில் இருக்கிறார்.

இந்த கிரக நிலை காரணமாக சில ராசிகள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டும். எந்தெந்த ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பார்ப்போம்.

ரிஷபம்
பெரிய அளவில் ரிஷப ராசிக்கு பிரச்னை இல்லை என்றாலும். அவர்கள் வண்டி, வாகனத்தைப் பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்
குடும்பத்தில் நல்ல பல சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு ஆரம்பிக்கும். அதில் சாதகமான நிலை ஏற்படும். இதனால் திடீர் சுப விரய செலவுகள் ஏற்படும். அதனால் செலவில் கவனம் தேவை.

கடகம்
கடக ராசியினர் எந்த ஒரு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆலோசித்து ஈடுபட வேண்டும். அதோடு புதிய முதலீடுகள் செய்யும் முன் கவனம் தேவை. வாகன பயனபாட்டின் போது கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

தனுசு
தனுசு ராசியினர் சற்று கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது. விட்டுக் கொடுத்து செல்லுதலும், உங்களின் பேச்சு பலரை காயப்படுத்தக் கூடும் என்பதால், பேச்சில் நிதானமும், அடக்கி வாசித்தலும் நன்மையை தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
குரு மகரத்தில் வக்கிர நிலையில் இருப்பதும், செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுவதால் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஒரு செயலை செய்யும் போது கவனமுடன் செய்வது அவசியம். பேச்சில் பொறுமையும், செயலில் கவனமும் தேவை. உங்களின் பிடிவாதம் பிரச்னைகளை தரக்கூடியதாக அமையும். பொறுமையுடன் முடிவெடுப்பது அவசியம். உங்களின் துணையின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. தொழில். வியாபாரத்தில் பல சிக்கல், இடையூறுகள் சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியினருக்கு அனைத்து விஷயங்களும் நல்ல பலன்கள் கிடைத்தாலும், அவர்கள் கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.