21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

 யாழ்ப்பாணம் உட்பட  21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை  முதல் புதன்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

அதன் பின்னர், புதன்கிழமை இரவு 8 மணிமுதல் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.