முக்கிய கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மஹிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் அறிவித்திருந்ததோடு கூட்டத்தையும் புறக்கணித்துள்ளன.

கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பொதுத் தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி, பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.