சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!

பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று அரசாங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தியது.

தனியார் பேருந்துகள் சமூக இடைவெளி நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இது மத்திய அரசின் கடமை அல்ல என கூறினார்.

“சமூக இடைவெளிகள் உட்பட சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தனியார் துறையினரும் பின்பற்றுகின்றன என்பதை மாகாண சபைகள் உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

மேலும் அரச பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளில் அத்தியாவசிய சேவையின் நிமித்தம் செல்லும் ஊழியர்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன, மேலும் அதில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுகின்றன என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.