கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார்.

இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது பரீட்சைகள் ஏனைய சில முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதுவரை தெற்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.

நாளை கிழக்கு மாகாணத்திற்கு வரும் செயலாளர் சித்ரானந்த, தொடர்ந்து வடக்கு, ஊவா  மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.