சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே திறக்க முடியும் – அனில் ஜாசிங்க

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் சலூன்கள், அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் விரைவில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி தேவையான மாற்றங்களைச் செய்த பின்னரே சலூன்கள், அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.