மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு சுகாதாரப் பொருட்கள் நன்கொடை

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு பல சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தேவையான சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் மியன்மாரில் உள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

மியன்மாரில் இருந்து இலங்கையர்கள் குழு ஒன்று கொண்டுவந்த Myanmar Airways International விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு விமானம் இந்த சுகாதாரப் பொருட்களை மியான்மரில் உள்ள இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு இலவசமாக கொண்டு வந்தது.

3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த சுகாதார பொருட்களில் 25 சுகாதார உடைகள், 6 ஆயிரம் அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும்  ஆயிரத்து 500 முகமூடிகள் உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.