ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை – அகிலவிராஜிற்கு பதில் வழங்கினார் சுஜீவ
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேறு கட்சிகளில் இணைந்துகொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் அகிலவிராஜ் காரியவசமின் கருத்திற்கு பதிலளிக்கும் போதே சுஜீவ சேனசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனேயே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக எவரும் கட்சியின் யாப்பை மீறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவரையாவது இடைநிறுத்தவேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாரையும் கட்சியின் யாப்பு குறித்து அறியாதவர்களையுமே இடைநிறுத்தவேண்டும் எனவும் சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை