கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பான ஆலோசனைகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

‘நவ ஜீவன ரடாவக் உதேசா’ என கூறப்படும் புதிய வாழ்க்கை கட்டமைப்பு முறைக்காக என குறித்த ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த தொடர் ஆலோசனைகள் மூலம் 46 பல்வேறு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டிகள் சுகாதார அமைச்சின் இணையத்தளம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன

இந்த வழிகாட்டித் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளல் மற்றும் செயற்படுவது சட்ட ரீதியிலான தேவை என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்த வழிகாட்டலுக்கு அமைவாக மாத்திரம் செயற்படுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.