ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் அஞ்சலி
றைந்த முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் இன்று (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா- கூமாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின்போது அன்னாரது உருவபடத்திற்கு நினைவு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை